செவ்வாய், 31 மார்ச், 2015

14 - துர்கா தேவி | Durga Devi - 1977

டிச 09, 1977 அன்று வெளியான படம், பக்திப் படம். பாடல்களும் அதற்கேற்றார் போலவே அமைந்திருக்கிறது. டிசம்பர் - மார்கழி- மாரியம்மன் பருவத்தை மனதில் வைத்து எடுத்திருப்பார் இயக்குநர், ரா.சங்கரன். பாடல்கள் கண்ணதாசன், வாலி. 

தேவி செந்தூரக் கோலம்  
ஜெயச்சந்திரன் + ஜானகி இணை பாடிய பாடல். தெய்வப்பெண்ணை காதலிக்கும் இளைஞனின் மனக்கவலை, அந்த உணர்வுகளின் பிண்ணனியில் வரும் பாடல் போல. காணொளி கிடைக்கவில்லை. இருந்தாலும் பாடல் அருமையாக இருக்கிறது. இதே பாடல், இன்பம் துன்பம் என இரு வடிவில் இருக்கிறது. தெய்வீகக்காதல், காதலில் ஒடுங்குதல் வகையான பாடல். ஜெயச்சந்திரனின் குரல் மிகவும் இனிமையாக இருக்கிறது. 

கேட்டா தெரியாது கேடு கொட்ட மானிடனே: 
மாரியம்மனே வந்து பாடும் அறிவுரை பாடல். கோபமாக ஒலிக்கிறது, சுசிலம்மா பாடியிருக்கிறார். வரிகள் சற்றே அடிப்படையாக இருக்கிறது, அந்த உணர்வை எடுத்துச்சொல்லத்தான் கவியரசர் விரும்பினார் போலும். இந்தப்பாடல் இணையத்தில் இல்லை. சத்தமேகத்தில் ஏற்றிவைக்கிறேன். 

கேட்டால் கேட்ட வரம்:
துர்கையம்மன் பாடல், உறுமி, துடி, எக்காளம் ஒலிக்க, உருகி பாடுகிறார், வாணி செயராம். பக்தியற்றவர்களும் கேட்கும் வலையிலான இசைக்குறிப்புகள், பாடல் கட்டமைப்பு, உணர்வுநிலை என நல்ல பாடல். இப்பாடலும் இணையத்தில் இல்லை. சத்தமேகத்தில் ஏற்றிவைக்கிறேன். 


செந்தூர தேவி, பாடல் மிகவும் அருமை. நாயகன் நாயகி பிரிவாற்றாமை வகையில் பாடும் முதல் பாடல் இதுதான். இங்கிருந்து தான், காதலர்களின் சோகப்பாடல் என்ற வகையிலான genre துவங்குகிறது ராஜா இசையில். அவ்வகையில் இது மிகவும் முக்கியமான பாடல். பல்வேறு காரணங்களால் வாழ்வில் சேரமுடியாத நாயகன் நாயகியின் துயரத்தை ராஜா முதன்முதலில் தொட்ட படம் இது. உங்களையும் கவரும் என நினைக்கிறேன். ஜெயச்சந்திரன் மிகவும் கவர்கிறார். :) 

படமோ, சுவரொட்டிகளே,  LP அட்டைகளோ கிடைக்கவில்லை. :( 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக