செவ்வாய், 24 மார்ச், 2015

இளையராஜாவின் படைப்புலகம்

எழுதப்புகுமுன் தீவிரமான சிந்தனைக்குள் ஆழ்ந்து, மலைத்துப்போனேன். இப்படியொரு தீவிரமான உழைப்பாளியை, படைப்பாளியை அணுகவே மனம் அச்சப்படுகிறது. அந்த உழைப்பின், தரத்தின் ஒரு துளியை எட்டிப்பிடித்தாலே வாழ்வின் உச்சங்களை நாம் தொட்டிடலாம். அந்த அச்சம் வழிநடத்த, இந்த தளத்தில் நான் செய்ய விழைவது, இளையராசாவின் படைப்புகளை, காலவரிசைப்படி அறிமுகப்படுத்துவதும், அதன் பின்புலத்தில் சில அலசல்களை முன்வைப்பதும், அதன் மீதான உங்கள் கருத்துக்களை பதிவு செய்வதும் என ஒரு முக்கோண முயற்சி. 

ராஜா ஒரு பாடலை எவ்வளவு தீவிரத்துடன் அணுகுவாரோ, அதே தீவிரத்துடன் அவரின் படைப்புலகில் ஒரு இசை ஆர்வலனாக, வழிதவறிய குழந்தையாக, சண்டையிடும் காதலியாக, உங்களுடன் பயணிக்க விழைகிறேன். 1000+ படங்களையும் நாம் அலசி முடிக்கும் முன் அவர் இன்னுமொரு 100 படங்கள் முன் சென்றிருப்பார். எழுதி, என் முட்டாள்தனத்தை, குறையறிவை வெளிப்படுத்தி, உங்கள் பங்களிப்பில் என் புரிதல்களை இன்னும் சற்று செழுமைப்படுத்திக்கொள்ளும் தன்னலம் தான் இம்முயற்சியின் பிண்ணனி. :) 

இது ஆங்கிலத்திலும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது என் ஆவல். நண்பர்களின் பங்களிப்புடன், அதையும் விரைவில் செயல்படுத்த முயல்கிறேன். உங்களின் ஆதரவின்றி, இந்தப் பயணம் சாத்தியமில்லை. மொட்டை, நம் வாழ்வில் ஒரு பகுதியாக இருந்த கணங்களை மீட்டெடுத்து, பொதுவெளியில் பகிரும் ஒரு களமாகவும் இப்பதிவை உங்கள் முன் வைக்கிறேன். அவரின் நிகரில்ஞானத்திற்கு என் வணக்கங்களும், உங்களுக்கு என் நன்றியும். :)  

4 கருத்துகள்:

  1. ஆயிரம் பதிவுகள் - இல்லை இல்லை, ஆயிரக்கணக்கில் பதிவுகள் - செய்ய நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணா, வணக்கம். நீங்களெல்லாம் முன்னோடி. உங்கள் உதவியும், கருத்துக்களும் அதிகம் தேவைப்படும் இங்கு. :)

      நீக்கு
  2. செறிவான நடையில் பாடல் பதிவுகள் ஒவ்வொன்றும் சிறப்பு! பெரியதொரு சவால். அதை முழு ஈடுபாட்டோடு செய்து முடிக்க வாழ்த்துக்கள் இசை !!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வெங்கி. ராஜாவின் இசை எதையும் எளிதாக்குகிறது. :)

      நீக்கு